Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீதிபதி சொல்லிட்டாருல்ல….! ”எல்லாம் முடிஞ்சு போச்சு” உற்சாகத்தில் கழகத்தினர் …!!

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை இரத்து செய்ய சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஆர்.எஸ் பாரதியை கைது செய்யக்கூடாது என்று மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சண்முகசுந்தரம், இளங்கோ உள்ளிட்டோர்  ஆஜராகி வாதாடிய நிலையில் ஆர்.எஸ் பாரதியை ரிமாண்ட் செய்ய முடியாது என்று நீதிபதி செல்வகுமார் இடைக்கால ஜாமீன் வழங்கி இருக்கிறார்.

Categories

Tech |