Categories
உலக செய்திகள்

“ஆஹா.. ஆச்சர்யம்!”…. கருவிலேயே உணவின் சுவை உணரும் குழந்தைகள்…!!!

இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கருவில் இருக்கும் போதே குழந்தைகள் தாய் உண்ணும் உணவின் சுவையை அறியும் என்ற ஆச்சர்ய தகவல் வெளியாகியிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் டர்ஹாம் என்னும் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தாயின் கருவறையில் இருக்கும் போதே சிசு, உணவுகளின் வாசனையையும் சுவையையும் உணர்ந்து முக பாவனைகளை வெளிப்படுத்தும் என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது கர்ப்பிணி பெண்கள் 100 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 35 பேருக்கு கேரட் சுவை உடைய கேப்சூல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சாப்பிட்ட 20 நிமிடங்கள் கழித்து கருவில் உள்ள குழந்தைகள் புன்னகைப்பது, பரிசோதனை மூலம் தெரிய வந்திருக்கிறது. அதே சமயத்தில், மேலும் 35 பேருக்கு முட்டைகோஸின் சுவையுடைய கேப்சூல்கள் கொடுக்கப்பட்டது.

அதை உண்ட கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள் சிறிது நேரத்தில் அழுவது போன்ற முக பாவனையை வெளிப்படுத்தியது பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |