முன்னணி இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடித் தளத்தின் மீது புகார் ஒன்றை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதை தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடி நிறுவனத்தின் மீது புகார் ஒன்றை வைத்துள்ளார்.
அது என்னவென்றால் “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று தள்ளி வெளியிட்டால் தயாரிப்பாளரிடம் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள் ‘content based films’ தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை கதை படங்கள் வளரும் புதியவர்கள் தழைப்பர்?” என்று பதிவிட்டுள்ளார்.
சொன்ன தேதியை
விட திரைப்படத்தை சற்று தள்ளி
வெளியிட்டால் தயாரிப்பாளரிடம்
தந்த அட்வான்ஸ்
தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன
சில ஓடிடி நிறுவனங்கள்'content based films'
தயாரிப்பாளர்கள்
வளர்ந்தால் தானே
ஓடிடி நிறுவனங்களுக்கு
பெருமை
கதை படங்கள் வளரும்
புதியவர்கள் தழைப்பர்?#ஓடிடி #OTT— Seenu Ramasamy (@seenuramasamy) January 4, 2022