கோவில்பட்டியில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி இன்று தொடங்குகின்றது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.ஆர் நகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது.
இப்போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி, கோவில்பட்டி கே.ஆர் கல்லூரி ஜி.வி.என் கல்லூரி, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, அரசு கல்லூரி பாளையங்கோட்டை, ஜான்சி கல்லூரி, தூய சேவியர் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, எஸ்.டி இந்து கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலந்து கொள்கின்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.