Categories
உலக செய்திகள்

“தீவிர கண்காணிப்பு”… மேலும் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள்… பிரதமர் முக்கிய அறிவிப்பு …!

பிரான்சில் மேலும் 2 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் குறிப்பிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் ஜென் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, கொரோனா தொற்று அதிகம் கொண்ட 20 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் தற்போது தொற்றால் பாதிக்கப்படும் 40 சதவீத பேருக்கு பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இந்நிலையில் 70வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே மாத நடுப்பகுதியில் இருந்து போடப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், மேலும் இரண்டு மாவட்டங்களான நைஸ் மற்றும் டன்கிர்க் யூ வில் ஊரடங்கின்  கடுமையான கண்காணிப்பு நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இருக்கும் பொது மக்கள் முறையான அனுமதி சான்றிதழ் உடனே வெளியில் பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |