கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,
* உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது.
* உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
* உணவு பார்சலை கொண்டு செல்லும் முன் விநியோக ஊழியருக்கு வெப்பப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
* வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாள் மட்டுமே ஓட்டலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட பல்வேறு வழிமுறைகளை உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு அம்மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.