Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

Instagramல் காதல்…. புது மாப்பிள்ளையின் மர்ம சாவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும் instagramல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்த நாளிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் புதுமணப்பெண் 23ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறு விட்டு சென்றுள்ளார்.

அதன் பின் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பிரசாத் தனது மனைவியை தேடி மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கும் அந்தப் பெண் வராததால் பிரசாத் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்பியுள்ளார். இவர் அந்தோணியார்புரம் செல்லும் சாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமர்ந்துள்ளார். இதனை அடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பிரசாத் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |