நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியைச் சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவைகள்,திமுக நிர்வாகிகள் கிராமசபை கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கான பாராட்டுக்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிபந்தனை இன்றி திரும்ப பெறவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும். இந்தியாவில் அதிமுக அதிக அளவு ஊழல் செய்வதை கண்டித்தும்,பொள்ளாச்சி வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்கின்ற 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.