Categories
உலக செய்திகள்

வயிறு வீங்கிய நிலையில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள்… பின்னணியில் இருக்கும் கொடூரம்… நைஜீரியாவில் அதிர்ச்சி..!!!

நைஜீரிய நாட்டில் ஊசியை செலுத்தி சிறுவர் சிறுமிகளின் வயிற்றை பெரிதாக்கி தர்மம் எடுக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நைஜீரிய நாட்டின் Lagos என்ற கிராமத்திற்கு சென்ற 4 பேர் அங்கிருந்து சிறுவர்களை அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர் ஒருவரின் மூலம் ஊசியை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களின் வயிறு பெரிதாகியிருக்கிறது. அதனைத்தொடர்ந்து கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி அந்த சிறுவர்களை சாலையில் தர்மம் எடுக்க வைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவங்கள் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நான்கு நபர்கள் கைதாகியுள்ளனர். மேலும், சிலரும் இதே போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |