கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி தீவிரமாக செயலாற்றுவதால் அதனை குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள ரஷ்யா அதற்கான ஆரம்ப கட்ட சோதனை பணிகளை தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக செயலாற்றுகிறது.
இதனால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டுள்ள அந்நாடு அதற்கான ஆரம்ப கட்ட சோதனை பணிகளையும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே ரஸ்யாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 23 மில்லியன் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார்கள். இந்த தகவலை மாஸ்கோவின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.