அமெரிக்காவில் படைத் தளபதிகளின் எச்சரிக்கையை மீறி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்த 20,000 பேரை பணி நீக்கம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் படைத்தளபதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வீரர்கள் மிகவும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பல மாதங்களாக கூறி வந்துள்ளார்கள்.
இருப்பினும் சுமார் 20,000 படை வீரர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்துள்ளார்கள். ஆகையினால் மேல் குறிப்பிட்டுள்ள கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்த 20,000 படை வீரர்களும் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.