சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டில் வரும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து நியூசிலாந்திற்குள் நுழையலாம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது.
ஆகையினால் சில நாடுகள் தங்கள் நாட்டிற்குள் கொரோனாவிற்காக போட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி நியூசிலாந்து அரசாங்கமும் அதிரடியான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கொரோனாவிற்காக போடப்படும் தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று தெரிவித்துள்ளது.