அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவுக்கு எதிரான கூடுதல் தவணை தடுப்பூசியை சுமார் 2.4 கோடி பேருக்கும் அதிகமானோர் செலுத்தியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆகையினால் அனைத்து நாடுகளும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரமாக நடத்தி வருகிறது.
அதன்படி அமெரிக்காவில் தற்போது வரை 43 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி கொரோனாவுக்கு எதிரான கூடுதல் தவணையையும் அதாவது பூஸ்டர் டோஸ்ஸையும் சுமார் 2.4 கோடி நபர்கள் போட்டுக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.