தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தனிநபர் இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக கூடுதலாக 23 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு படை வீரர்கள் எத்தனை பேர் தேவை என்ற விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றனர்.
அதிகபட்ச வாக்குப்பதிவை குறிக்கோளாக கொண்டு பிரபலங்களை வைத்து குறும்படங்களை தயாரிக்கும் பணியும், துண்டுபிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சிடும் பணியும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் தாசில்தார், சிறப்பு தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என நான்கு பேர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.