ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி பக்தர்கள் இலவச பிரசாத பெறுவதற்கு ரசீது வழங்கப்பட்டு வருகின்றது.
ஈரோடு தலைமை தபால் நிலையம் முதுநிலை அஞ்சல் அதிகாரி ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனி முருகன் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகமும் தபால் துறையும் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா சூழலில் பக்தர்கள் அதிகம் கோவிலுக்கு வராததினால், பக்தர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்தபடியே பஞ்சாமிர்தம் விபூதி மற்றும் ராஜ அலங்கார திருஉருவப்படம் போன்றவற்றை ரூபாய் 250 க்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு பக்தர்கள் செய்ய வேண்டியது ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ரூபாய் 250 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பிறகு பழனி தண்டாயுதபாணி கோவிலின் பிரசாதம் வீடுகளைத் தேடி விரைவு தபால் மூலம் வந்து சேரும் என்று கூறப்படுகின்றது.