இரு சக்கர வாகனத்தில் செல்லும் கவல்த்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்லவேண்டும் என சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள செய்தியில் , இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் போது, உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் அனைவரும், முக்கியமாக காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீது போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அபராதம் விதிப்பார்கள். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும், சட்டவிதிகளை செயல்படுத்துவதில் ஒரே முறைதான் கடைபிடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Categories
இனி போலீசாருக்கும் இது கட்டாயம் ….மீறினால் அபராதம் ….அதிரடி உத்தரவு ….!!!!
