Categories
உலக செய்திகள்

இனி முகக்கவசம் வேண்டாம்… பீஜிங்கில் சீனாவின் அதிரடி அறிவிப்பு…!!!

பீஜிங்கில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று சீன அரசு கூறியுள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனத் தலைநகரான பீஜிங்கில் சில நாட்களாக கட்டுப்பாட்டில் இருக்கின்றது. பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 935 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 9 பேர் பலியாகிய நிலையில், 924 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் எவரும் இனி முக கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று சீன அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நேரத்தில் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 17ஆம் தேதி பீஜிங்கில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்ற அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன் பின்னர் ஜின்பாடி சந்தை மூலமாக கொரோனா பரவியதால் அந்த அறிவிப்பு திரும்பவும் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |