சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்த இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அனைத்து நாடுகளிலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் இங்கிலாந்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்தலின் போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் மூலம் கொரோனா பரிசோதனை 2 முறை செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் சுகாதார துறை செயலாளர் திடீரென கொரோனா பரிசோதனை செய்யும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதை அவர் கண்டறிந்துள்ளார். இதனை கடுமையாக கண்டித்த இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் 57 நிறுவனங்களை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் என்பதிலிருந்து நீக்கியுள்ளார். மேலும் 82 தனியார் நிறுவனங்களுக்கு வேலைநிறுத்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.