Categories
தேனி மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… அதான் நான் அப்படி பண்ணுனேன்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!! [

ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு பெண் கலெக்டரின் கார் முன்பாக வந்து நின்று தனது கையில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே சென்று அப்பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர்.

பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது “நான் உத்தமபாளையத்தை சேர்ந்த சித்ரா. எனது கணவரான சுரேஷ் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது. நான் என் பிள்ளைகளுடன் என் கணவர் வீட்டில் இருந்து வருகிறேன். இந்நிலையில் என் கணவரின் குடும்பத்தினர் நேற்று எங்களை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் நான் எனது பெற்றோர் வீட்டில் தற்சமயம் இருக்கிறேன். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நான் எனது பிள்ளைகளுடன் அதே வீட்டில் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |