Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர்” தீபாவளிக்கா…? பொங்கலுக்கா….? தயாரிப்பாளர் விளக்கம்….!!

மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அதிகம் மிஸ் செய்யும் இடமாக தியேட்டர்கள் இருக்கின்றன. பல பிரபல நட்சத்திரங்களின் படங்கள் தியேட்டரில் வெளியாக முடியாமல் தாமதமாகி வருவதால், பல ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தேதி தள்ளிப் போடப்பட்டு கொண்டே செல்வதால், படம் OTT இல் வெளியாகி விடுமோ என்ற அச்சம் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், எக்காரணத்தைக் கொண்டும் மாஸ்டர் திரைப்படம் OTT இல் வெளியிடப்படாது.

அவரது திரைப் படங்களை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடத்தான் ஆசைப்படுவார்கள். இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது. இனியும் அப்படித்தான் நடக்கும் எனவே எவ்வளவு தாமதம் ஆனாலும் சரி, காத்திருந்து படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வோம். அது வருகின்ற தீபாவளியாக இருக்கலாம் அல்லது பொங்கலாக கூட இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |