Categories
கிரிக்கெட் விளையாட்டு

INDW VS AUSW 2-வது டி20 : இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையேயான  2-வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது .இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான           2-வது டி20 போட்டி இன்று  கராரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா – ஷபாலி வர்மா  ஜோடி களமிறங்கினர்.இதில் மந்தனா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து ஷபாலி 3 ரன்னில் வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக  பூஜா வஸ்த்ரகர்  37 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது .இறுதியாக 19.1  ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |