Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvZIM : தினேஷ் கார்த்திக் இல்லை…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்….!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதியை விட்டு வெளியேறியது. தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை பாகிஸ்தான் வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது.

அதாவது, குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் 2வில் முதலிடம் பிடித்து அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். ஒருவேளை தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய லெவன் : ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட்கோலி , சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர். அஷ்வின், புனனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ஜிம்பாப்வே  லெவன் : மாதேவேரே, எர்வின், சகாப்வா, வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டி முனியோங்கா, ரியான் பர்ல், மசகட்சா, டிஎல் சதாரா, ஆர். ங்கரவா, பி முசரபானி.

Categories

Tech |