இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் காண்பதால் ஆட்டத்தில் விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருகின்றனர். இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் BCCI தனது ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் சர்மா பயிற்சி எடுக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சி எடுப்பதை ரிஷப் பண்ட் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.
Rohit bats, Rishabh watches 👀#TeamIndia | #WIvIND | @ImRo45 | @RishabhPant17 pic.twitter.com/1twNyIrvhF
— BCCI (@BCCI) August 5, 2022