இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி இன்று (6ஆம் தேதி) நடக்கிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் காண்பதால் ஆட்டத்தில் விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது..
இரு அணி வீரர்களுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியினை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், அஸ்வின் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஹெட் மயர், ஹோல்டர், மெக்காய் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று நெருக்கடியுடன் களம் காண்கிறது. தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும் என்பதால் கண்டிப்பாக வெற்றி பெறப் போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.