ஆகஸ்ட் 28 ல் நடந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடியதாக முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் முடிந்த அளவிற்கு தட்டி தடுமாறி 43 (42) ரன்கள் எடுத்தார்.. மேலும் இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் நஸீம் ஷா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த விராட் கோலி 35 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.. சூரியகுமார் யாதவ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார்.. இந்திய அணி அப்போது 14.2 ஓவரில் 89/4 என்று தடுமாறி கொண்டிருந்தது. அப்போது 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக பந்துவீச்சாளர்களை கையாண்டனர்.. ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக கடைசிவரை இருவரும் திட்டமிட்டு எடுத்துச் சென்றனர். இருவரும் தேவையில்லாத ஷாட் ஆடாமல் கிடைக்கும் பந்தை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி, அதிகளவில் 2 ரன்கள் ஓடி எடுத்தனர்.
கடைசியாக இரண்டு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, ரசிகர்கள் பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், 19 வது ஓவரில் ஹர்திக் 3 பவுண்டரி விளாச 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் என்ற நிலை வந்த நிலை போது, முகமது நவாஸ் வீசிய முதல் பந்தை, 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 (29) ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா சிக்சர் அடிக்க முயன்று கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் இரண்டாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து ஹர்த்திக்கிடம் கொடுத்தார்.. இதையடுத்து 3ஆவது பந்தை ஹர்திக் அடிக்க அது பீல்டரிடம் சென்று டாட் பாலானது.. அப்போது 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்றதால் ரசிகர்கள், திக் திக் இதயத்துடிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா தலையை சரித்து நான் பார்த்து கொள்கிறேன் என்பதுபோல கார்த்திக்கிடம் சொன்னார்..
3 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட அந்த பந்தை சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய ரசிகர்கள் பதட்டத்துடன் இருந்த நிலையில், அவர் பதட்டமடையாமல் சிக்ஸர் அடித்து கூலாக கையை ஸ்டைலாக தூக்கியதுடன், ஆட்டநாயகன் விருதையும் தூக்கி சென்றார். ஹர்திக் 17 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து இருந்தார்.. அதேபோல் பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 148 ரன்கள் எடுத்து வென்றது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், ஆகஸ்ட் 28 ல் நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடியதாக முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, கிரிக்கெட் வென்றது என்றுதான் சொல்ல முடியும், அது இந்தியா-பாகிஸ்தான் அல்ல. போட்டி மிகவும் அருமையாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடியது என நினைக்கிறேன். வெற்றிபெறும் அணி அதிக மகிழ்ச்சியைப் பெறுகிறது, அதே நேரத்தில் தோற்றவர்கள் அடுத்த முறை முயற்சிப்போம் என்று சொல்லலாம். விளையாட்டைப் பற்றியது இதுதான் என்று என்று தெரிவித்துள்ளார்..
I can only say Cricket won, it's not India-Pakistan. Match was really fantastic. I think both teams played so well. Team which wins get much more joy while those who lose can say that they'll try next time. That's what sport is about: Veteran cricketer Kapil Dev to ANI#INDvsPAK pic.twitter.com/hb0TSz0X71
— ANI (@ANI) August 30, 2022