இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படுகிறார். டி20 தொடர் இன்று தொடங்கி நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 25ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது மழை காரணமாக 12 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி இன்னும் தொடங்கவில்லை. டாஸ் போடப்படவில்லை. 80% சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் போட்டி நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
Toss at Sky Stadium, Wellington has been delayed due to persistent rains.
Stay tuned for further updates.#NZvIND pic.twitter.com/e2QJYdAnRN
— BCCI (@BCCI) November 18, 2022