Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது ஏன்?… பிசிசிஐ விளக்கம்!!

இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியது என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டது.

4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.. அதேபோல இந்திய வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என வந்த நிலையில், மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டுமுடிவுக்காக காத்திருந்தார்கள்..

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுதவற்கு இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள்..இந்த சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 5வது டெஸ்ட்  போட்டியை ரத்துசெய்தது. பிசிசிஐயுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியது என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. டெஸ்ட் போட்டியை  நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னணி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |