Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : செம பவுலிங்…. அடுத்தடுத்து விக்கெட்….. 99 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்க அணி..!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு சுருண்டது..

இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் 3ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜன்னிமன் மலன் 15 மற்றும் குயிண்டன் டிகாக் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்பரன்களுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர்.

முக்கிய வீரர்களான எய்டன் மார்க்ரம் 9, டேவிட் மில்லர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி நடையை கட்டினர். அதிகபட்சமாக ஹென்றி கிளாசன் மட்டுமே 34 ரன்கள் எடுத்தார்.. மற்றபடி யாருமே பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை..   இறுதியில் தென்னாபிரிக்கா அணி 27. 1 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களுக்கு சுருண்டது. ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஷ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |