Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvBAN : டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு…. பெரிய ஸ்கோர் அடிக்குமா இந்தியா?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது..

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது.. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்க தயாராக உள்ளது. இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தியா இரண்டாவது இடத்திலும், வங்கதேசம் மூன்றாவது இடத்திலும் அடுத்தடுத்து இருக்கிறது. எனவே இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக உள்ளது.

பங்களாதேஷ் XI :

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், எஸ் அல் ஹசன், அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, முசாடெக் ஹொசைன், நூருல் ஹசன், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.

இந்திய லெவன் :

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

Categories

Tech |