Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 23.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் – 23.01.2020

மேஷம் :

இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வீட்டு தேவைகள் நிவர்த்தியாகும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களினால் அலைச்சல் இருக்கும. சிக்கனமாக இருப்பதன்  மூலம் பணப்பிரச்சினை அகலும்.

ரிஷபம் :

இன்று எந்த செயலிலும்  சுறுசுறுப்பற்று  செயல்படுவீர்கள். தேவை இல்லாத  செலவு செய்யவேண்டிவரும். உங்கள் ராசியில்  சந்திராஷ்டமம் நிலைப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம்  அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகள் செய்யாமல்இருப்பது நல்லது.

மிதுனம் :

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைத்து   மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களினால் நல்ல பலன்கள் கிடைக்கும். வருமானம் கூடுவதற்கான  வாய்ப்புகள் இருக்கும்.

கடகம் :

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். வழக்குகளில் சாதகமான பலனை  பெறுவீர்கள்.  இன்று எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம் :

இன்று உங்களுக்கு பணம்  தாராளமாக வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில்  மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபநிகழச்சிகள் நடைபெறும் யோகம் உள்ளது. வீட்டு தேவைகள் எல்லாம் இன்று பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை ஹாலும். தொழிலில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபத்தை பெறுவீர்கள்.

கன்னி :

இன்று குடும்பத்தில் தேவை அற்ற  பிரச்சினை ஏற்படலாம். நண்பர்கள் வழியில்  எதிர்பார்த்து இருந்த உதவிகள் ஏமாற்றம்  தரும். உடன் பிறந்தவர்களின்  உதவி கிடைக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் பணப்பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை  குறையும்.

துலாம் :

இன்று நீங்கள் எடுத்த  காரியம் அனைத்திலும் நிச்சயம்  வெற்றி  உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஒற்றுமை வலுப்பெறும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்கள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை  தரும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள்  இணைவார்கள்.

விருச்சிகம் :

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில  தடைகள்  ஏற்படலாம். உத்தியோகத்தில்  உள்ளவர்களுக்கு  மேலதிகாரிகளின்  நெருக்கடி இருக்கும் . குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினை தீரும். பணபற்றாக்குறை அகலும். வருமானம் போதுமானதாக  இருக்கும்.

தனுசு :

இன்று குடும்பத்தினர் இடையே ஒற்றுமை நிறைந்த  சூழ்நிலை உருவாகும். உடல் நலம்  சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  புதிய பதவிகள் உங்களை  தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் விரைவில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரண்டு மடங்கு பெருகும்.

மகரம் :

இன்று பணவரவு அளவாகவே  இருக்கும். உறவினர்களிடம் வீண் மனகவலை  ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவை இல்லாத  பிரச்சினைகள்  மன உளைச்சல் உண்டாக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக  இருப்பார்கள். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் :

இன்று உடல் நலம் அருமையாக இருக்கும். அரசு  சார்பில்  எதிர்பார்த்த உதவிகள் விரைவில்  கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக வேலையாட்களின்  உதவி  கிட்டும். தொழில் சம்மந்தமாக  வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

மீனம் :

இன்று பிள்ளைகள் வழியில்  நல்ல செய்திகள் கிடைக்கும்.  வேலை தொடர்பான  வெளியூர் பயணங்களால் சிறப்பான  பலன் கிட்டும். தொழிலில் புதிய வழிகளை  பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல பலனை தரும். விழி உயர்ந்த பொருட்களின்  சேர்க்கை அதிகரிக்கும்.

Categories

Tech |