Categories
உலக செய்திகள்

“ராணுவ ஆட்சியை ஒடுக்க துண்டிக்கப்பட்ட இணைய சேவை”… மீண்டும் தொடக்கம்….!!

மியான்மரில் துண்டிக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உட்பட சில முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் சிறை பிடித்து வைத்தனர். மேலும் ஓர் ஆண்டிற்கு அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மியான்மரில் பெரும் பரபரப்பு நிலவியது.

மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது  என்ற தகவல் உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக மியான்மரின் சில முக்கிய பகுதிகளில் அந்நாட்டு மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மியான்மரில் பல இடங்களில் ஆயுதத்துடன் கூடிய போர் வாகனங்கள் சாலைகளில் சென்றதாக தகவல்கள் வெளியானது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 9 மணி வரை இணைய சேவைகளை துண்டிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் இணைய சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் மியான்மரில் இன்று முதல் மீண்டும் இணைய சேவை தொடங்கப்பட்டது. திடீரென இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது ராணுவத்தின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான ஒரு திட்டம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |