நேபாளத்தை சேர்ந்த முன்னாள் அரசர் மற்றும் அரசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாள நாட்டின் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா அரசி கோமல் ஷா மற்றும் மகள் பிரேரணா ஷா. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரசர் மற்றும் அரசுக்கு கொரோனா பாதிப்பு பொழுது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் இருவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் நேற்று காத்மண்டுவில் அமைந்துள்ள நார்விக் சர்வதேச மருத்துவமனையில் 1 மணி அளவில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர். மேலும் மருத்துவமனையில் மூவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொண்ட முன்னாள் அரசருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.