இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 26. 51 % உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை பாதிப்பு தலைவிரித்தாடிய நிலையிலும் பதப்படுத்தப்பட்ட பொருளின் ஏற்றுமதியானது நடப்பு ஆண்டில் 26. 51 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது மத்திய கிழக்கு நாடுகள், தொலைதூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள சந்தைகளில் பெரிதும் தேவைப்படும் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், மில் பொருட்கள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
மேலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பதப்படுத்தப்பட்ட பொருள்களின் ஏற்றுமதியானது முந்தைய ஆண்டின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும் பொழுது 26.51 % வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியின் மொத்த மதிப்பானது ரூ.43,798 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி தானியம் சார்ந்த பொருட்கள் (18 சதவீதம்), பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் சாறு வகைகள் (12 சதவீதம்) மற்றும் கடலை (7 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதி வளர்ச்சி பெற்றுள்ளது.மேலும் நடப்பு நிதியாண்டில் எண்ணெய் உணவுகள் ஏற்றுமதி 96 % அளவுக்கு உயர்ந்திருப்பதாக கூறியுள்ளனர்.