இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை ,வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா திணறி வருகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால், உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு , அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மற்றும் நிதி உதவிகளை செய்து கொண்டு வருகின்றன.இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் கொரோனா தொற்றிற்கு , நிதி உதவி வழங்கியுள்ளது. அந்நாட்டின் யுனிசெப் அமைப்புடன் இணைந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூபாய் 37 லட்சத்தை இந்தியாவிற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.