Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அச்சுறுத்தும் ஒமைக்ரான்…. மத்திய அரசு திட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் விரைவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
நாடு முழுவதும் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து உருமாறிய கொரோனா தொற்றான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள் பரவத் தொடங்கின. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தியதன் பின்னர் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவில் மட்டும் இதுவரை 1,525 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் 460, டெல்லியில் 351, குஜராத்தில் 136, தமிழகத்தில் 117, கேரளாவில் 109, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 67 , கர்நாடகாவில் 64, ஹரியானாவில் 63, மேற்குவங்கத்தில் 20 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒமைக்ரான் ஒருபுறம் இருக்கையில், மீண்டும் கொரோனா தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,553 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,249 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று மட்டும் 284 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் நாடு முழுவதும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

Categories

Tech |