இந்திய மகளிர் அணி முதல்முறையாக இந்த ஆண்டு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக முதன்முறையாக விளையாட உள்ளது. இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை பெர்த்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிர்தி மந்தனா, நேற்று அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் .
இதுகுறித்து அவர் கூறும் போது , உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஆண்கள் கிரிக்கெட் அணி பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை பார்க்கும்போது, நமக்கும் ஒருநாள் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில், விளையாடும் அனுபவம் கிடைக்கும் என நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் தற்போது இந்திய மகளிர் அணி பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதை நினைத்தாலே மிகுந்த மகிழ்ச்சியும் , மனதுக்குள் பரவசமூட்டுகிறது. இது இந்திய மகளிர் அணிக்கு சிறப்பு வாய்ந்த தருணமாக இருக்கும்’ என்று அவர் கூறினார்.