ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீ இந்தியாவிற்கு ஆக்சிசன் வாங்குவதற்காக ஒரு பிட்காயினை நன்கொடையாக வழங்கினார் .
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதோடு மருத்துவமனைகளில்ஆக்சிஜன் பற்றாக்குறையால் ,நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. நேற்று முன்தினம் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக நடப்பு ஐபிஎல் போட்டியில் ,கொல்கத்தா அணியில் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலரை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீ உதவி செய்துள்ளார் .
அவர் இந்தியாவிற்கு ஆக்சிசன் வாங்குவதற்காக ஒரு பிட்காயின் (ரூபாய் 40 லட்சம் மதிப்பு) நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பிரெட்லீ, இந்தியா எனக்கு 2வது தாய்வீடு போன்றதாகும். நான் விளையாடிய போதும் , ஓய்வு பெற்ற பிறகும், இந்திய மக்கள் என் மீது காட்டும் அன்பும் ,பாசமும் சிறந்ததாகும். தற்போது இந்த இக்கட்டான சூழலில், நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு ,உதவிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Well done @patcummins30 🙏🏻 pic.twitter.com/iCeU6933Kp
— @BrettLee_58 (@BrettLee_58) April 27, 2021