இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான பங்களிப்பை தந்துள்ளதாக, நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ரிச்சர்ட் ஹேட்லி பாராட்டி பேசியுள்ளார் .
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ,ஆல்ரவுண்டருமான ரிச்சர்ட் ஹேட்லி இந்திய கிரிக்கெட் அணியை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘ இந்திய அணி கிரிக்கெட்டிற்கு அதிகளவு வருமானத்தை கொண்டு வருகின்றது . இந்திய அணி இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளமே வேறு மாதிரியாக இருக்கும். குறிப்பாக இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான பங்களிப்பை தந்துள்ளது. இந்திய அணியால்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புத்துயிர் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 36 ரன்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு அந்த தோல்வியில் இருந்து மீண்டு, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விதம், அற்புதமாக இருந்தது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. இதில் இந்திய அணியில் அதிகமாக இளம் வீரர்கள் தேர்வாகி சிறப்பாக விளையாடி வருகின்றார்கள். குறிப்பாக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் நிறைய வீரர்கள் உள்ளனர். உலகச் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்வது கடினமானது என்று அவர் கூறினார்.