மாவட்ட ஊராட்சித் தலைவர் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வருகின்ற பதினோராம் தேதி மாவட்ட தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லலிதா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில், இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என்பதில் சந்தேகம் உள்ளதால் தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசாமி ரவீந்திரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென கூறியிருந்தார். அதற்கு தேவைப்படும் இடங்களில் வீடியோ பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது ஆகவே அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்யலாமே என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் 11 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்று அறிவுறுத்தல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது