Categories
உலக செய்திகள்

ஐ.நா.சபை பொதுக்கூட்டம்…. உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர்…. பொங்கி எழுந்த இந்தியா பெண் அதிகாரி….!!

ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் ஐ.நா.சபையின் 76 ஆவது பொதுக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அதிகாரியும்  ஐ.நா. சபையின் முதன்மைச் செயலருமான சினேகா துபே IFS கலந்து கொண்டார். இதே போன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அவர் அதில் “காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் இந்தியா அரசியலின் நிலைப்பாடு குறித்தும் பேசியுள்ளார். அதிலும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் அவர்கள் அங்கு துன்புறத்தப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் இந்திய அரசு அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. குறிப்பாக 370வது சட்டப்பிரிவை அகற்றி காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை இந்தியா பறித்துள்ளது. அவர்களுக்கு எதிராக இந்தியாவில் மாபெரும் அரசு இயங்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா சார்பில் கலந்து கொண்ட சினேகா துபே தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது “பாகிஸ்தான் அரசு உலக அளவில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு இலவச பாஸ் கொடுத்து அழைத்து அவர்களுக்கு அடைக்கலம் தந்துள்ளது. ஏதோ தங்களை நல்லவர்கள் போல வெளியுலகிற்கு கட்டிக்கொண்டு, உள்ளுக்குள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதால் தான் மற்ற உலக நாடுகள் கடுமையான சவால்களை  எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பேசுவதற்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. மேலும் ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். அங்கு அத்துமீறி பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள பகுதிகள் கூட இந்தியாவிற்கு தான் உரிமையானது என்பதை நீங்கள் மறக்க வேண்டாம். உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேறுங்கள். அதிலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை முதலில் நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே வங்கதேச மக்களுக்கு செய்த கொடுமைகள் எவராலும் மறக்க இயலாது. இது மட்டுமின்றி அமெரிக்காவில்  9/11  தாக்குதல் நடத்திய பின்லேடனுக்கு பாகிஸ்தான் துணை நின்று அவருக்கு ஆதரவும் அளித்தனர். தற்பொழுதும் கூட அவரை ஒரு தியாகி, போராளி என்று கூறி வருகின்றனர். அதிலும் அமெரிக்காவில் இவ்வாறு தாக்குதல் நடத்தியவரை பாகிஸ்தான் தியாகி என்று கூறுகிறது. இப்படிப்பட்ட பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு எதிராக பேசலாமா? குறிப்பாக அவர்களின் மீது உள்ள கரையை மறைப்பதற்காக தான் இந்தியா மீது பொய்யான பரப்புரைகளை கூறி வருகின்றது.

அதற்காக உலகளாவிய மேடையை பாகிஸ்தான் கருவியாக தவறான வழியில் பயன்படுத்தியுள்ளது” என்று பேசியுள்ளார். மேலும் சினேகா துபேவின் பேச்சை கேட்ட அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். இது குறித்த காணொளி காட்சியானது இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் வெளியாகி அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ள உலக நாடுகளும் சினேகா துபேவின் பேச்சிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |