Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் அமைதிக்கு தயாராகும் சீனா… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இரு நாட்டின் சமூக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார் என்று சீனா கூறியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அந்த உரையில், எல்லையில் ஆக்கிரமிப்பு மூலமாக இந்தியாவின் இறையாண்மையை பழிக்க முயற்சி செய்பவர்களுக்கு நமது பாதுகாப்பு வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறுகையில், ” பிரதமர் மோடி ஆற்றிய உரையை கேட்டோம்.

சீனா மற்றும் இந்தியா 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள். எங்களுக்குள் சமூக உறவு மலர்வது, இருநாடுகளுக்கும் மட்டுமன்றி உலக நாடுகள் முழுவதிலும் அமைதியையும், நட்புறவையும் உருவாக்கும். அதனால் கருத்து வேறுபாடுகளை களைந்து, அரசியல் ரீதியிலான சமூக நம்பிக்கையை உருவாக்கி, இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனா தயாராக இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |