இந்தியா இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரை விளையாடி வருகின்றது. கடந்த 7ஆம் தேதி நடந்த முதல் 20ஓவர் போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று 2ஆவது T20 போட்டி, பர்மிங்காமில் உள்ள ரோஸ் பவுல் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.
இந்திய அணி சார்பில் பேட்டிங்கில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 46*, கேப்டன் ரோஹித் சர்மா 31, ரிஷிப் பந்த் 26 ரன்கள் அடித்தனர்.. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, கிரீஸ் ஜோர்டன் 4 விக்கெட்டும், ரிச்சர்ட் க்ளீஸோன் 3விக்கெட்டும் எடுத்தனர்.
171 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்னுக்கு அணைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில், மெயின் அலி 35, டேவிட் வில்லே 33*, டேவிட் மாலன் 19 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, புவனேஷ்குமார் 3 விக்கெட்டும், பும்ரா, சாஹல் தலா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், ஹர்டிக் பாண்டியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்திய அணி பேட்டிங்:
இங்கிலாந்து அணி பந்து வீச்சு:
இங்கிலாந்து அணி பேட்டிங்:
இந்திய அணி பந்து வீச்சு: