இந்தியாவில் புதிதாக 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 48 ஆயிரத்து 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 பேராக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 551 பேரில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து 82 ஆயிரத்து 649 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் மனிதர்கள் தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் கொரோனா போன்ற எண்ணற்ற கொடிய வைரஸ் உருவாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பெருக்ககுழு கூறியுள்ளது. இதன் மூலம் உயிரிழப்புகள்லோடு உலகளாவிய கோரோனாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்படும் என்று அந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.