Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நடுத்தர குடும்பதினரின் …ஏழ்மை நிலையில் இரு மடங்கு அதிகரிப்பு …ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் …!!!

இந்தியாவில் நடுத்தர குடும்ப வர்க்கத்தினரின் ,ஏழ்மை நிலையில்  இரு மடங்காக  அதிகரித்து காணப்படுவதாக ஆய்வின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா  தொற்று மக்களின் உயிரை பறித்ததோடு, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தினரின் தினசரி வருமானம் ரூபாய் 725 முதல் 1450 வரை  இருந்து வந்தது.  இந்த நிலை தற்போது ,3-1 பங்கு குறைந்துவிட்டதாக  ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் ‘பியூ ரிசர்ச்’ அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின் படி இந்தியாவில் ,கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றிக்கு  முன் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை சுமார் 9.9 கோடி இருந்தது என்று கணக்கிடப்பட்டது.

ஆனால் தற்போது மூன்றில் ஒரு பங்காக 6.6 கோடி நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே இருப்பதாக கூறினர்.  கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் ,நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை சுமார் 3.2 கோடிக்கு கீழ் குறைந்து காணப்படுவதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஏழை மக்களும் தினசரி வருமானமாக ரூபாய் 145 மற்றும் அதற்கு குறைவான உள்ளவர்களின் எண்ணிக்கை 7.5 கோடி அளவிற்கு உயர்ந்து காணப்படுவதாக மதிப்பிடப்பட்டது.இது உலக வறுமையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்து காணப்படுவதாக கூறுகின்றனர். இதனால் வருகின்ற காலத்தில்  இந்தியாவில் ,ஏழைகளின் எண்ணிக்கையானது சுமார் 13 . 4 கோடி அளவிற்கு உயர்ந்து காணப்படும் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று ‘பியூ ரிசர்ச் ‘  அறிக்கை சீனாவையும் ஆய்வு செய்தது. ஏனெனில் சீனாவும், இந்தியாவைப் போன்றே மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் பொருளாதார மந்தமான சூழல்  இன்றளவும் அதிகம்  இருப்பதாகவும் ,ஆனால் சீனா  மந்த நிலையிலிருந்து மிக விரைவாக  பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்தது.கொரோனா  காலத்திற்கு முன், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எண்ணிக்கை 5.8 சதவீதமாகவும் ,சீனாவின் எண்ணிக்கை 5.9 சதவீதமாக காணப்பட்டது. ஆனால் இந்த நிலையானது இந்தியாவில் 9.6 சதவீதம்  குறைந்துள்ளதாகவும் ,சீனா வெறும் 2% மட்டுமே குறைந்து காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |