Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 1,21,090 பேர் பலி…!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 563 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 648 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்து 88 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 386 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

73 லட்சத்து 73 ஆயிரத்து 375 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிர் இழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 563 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும். மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |