இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்கியுள்ளது.
வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 73 ஆயிரத்து 272 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 8 லட்சத்து 83 ஆயிரத்து 185 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 59 லட்சத்து 88 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 926 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சம் 7,416 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.