இலங்கை நாட்டில் பால் பொருட்களுக்கு இறக்குமதியை தவிர்த்து விட்டு உள்நாட்டிலேயே பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட பட்டுள்ளது. இதற்காக இலங்கை நாட்டுக்கு இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெற்ற நிலையில், இந்தியா சார்பில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் அமுல் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இவர்களுடன் இணைந்து பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பொது மற்றும் தனியார் துறைகளில் இருந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்த குழு வழங்கும் ஆலோசனையின் படி உள்நாட்டில் பால்வளமானது மேம்படுத்தப்படும். மேலும் இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.