Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் முதல் நபர் கொரோனாவால் உயிரிழப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லி , தமிழகம் உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் என 70க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தியாவில் முதல் பலி அரங்கேறியுள்ளது.

பிப்ரவரி 29 ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து கர்நாடக மாநிலம் கல்புர்க்கி வந்த 76 வயதான முகமத் சித்திக் உசேன் என்பவர் சளி , காய்ச்சலால் அவதிப்பட்டு கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில் குரோபர்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸில் (ஜிம்ஸ்) தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரின் இரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டநிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் கொரோனா சோதனை முடிவு வெளியாகாமல் கொரோனா வைரசஸ் காரணமாக உயிரிழப்பா ? என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ரத்த மாதிரியின் முடிவில் அவர் கொரோனா வைரஸ் காரணமாக தான் உயிரிழந்தார் என்று அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழப்பு  இருந்தது குஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது முதல் பலி உறுதியாகியுள்ளது.

Categories

Tech |