Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிச்சுற்றில் போராடி தோல்வியைத் தழுவிய இந்திய இணை….!!

பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தனர்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடி இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி கிதியோன் மற்றும் கெவின் சஞ்சய் சுகமுல்ஜோவை எதிர்கொண்டது.

Image

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கதியோன் இணை முதல் செட் கணக்கை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி சாத்விக்சாய்ராஜ் இணைக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் போராடிய இந்திய இணை 16-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் இழந்தது.இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்றில் இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சய் இணை 21-18, 21-16 என்ற நேர்செட் கணக்கில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Categories

Tech |