இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்த ஜோ பைடன் அரசு சில விலக்குகளையும் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இது உலகையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையாக 4 லட்சத்தை கடந்ததை அடுத்து பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மே 4 தேதி முதல் இந்தியர்கள் யாரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அவர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது அமெரிக்க குடிமக்கள் அல்லாத யாரும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என்பதாகும். அதே வேளையில் சில விளக்குகளையும் அவர் பிறப்பித்துள்ளார்.
அது என்னவென்றால் அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமெரிக்கா வரலாம் எனவும் சீனா, ஈரான், பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் எனவும் மேலும் இலையுதிர் காலங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் கல்வியாளர்கள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு நாடுகளுக்கும் முக்கியமான உட்கட்டமைப்பு ஆதரவை வழங்கும் நபர்களுக்கு அமெரிக்கா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இந்தியாவுக்கான இந்த பயண கட்டுப்பாட்டை விதித்த ஜோ பைடனுக்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்.பி கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்திய வம்சாவளி எம்.பி ரோசண்ணா ஆதரித்து வந்துள்ளார்.